உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி


உலகக்கோப்பை கிரிக்கெட்: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி
x

வங்காளதேச அணியை வீழ்த்தி 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது

தர்மசலா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்மசாலாவில் நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ , டேவிட் மலான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர் .தொடர்ந்து பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் நிலைத்து ஆடினார்.மலான் ,ரூட் , இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடிய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார்.தொடர்ந்து அவர் 140 ரன்களில் வெளியேறினார், மறுபுறம் அரைசதம் அடித்த ஜோ ரூட் 82 ரன்களில் வெளியேறினார்.இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது.வங்காளதேச அணியில் மெஹ்தி ஹாசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்கத்தில் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . மறுபுறம் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தார் . அவர் 76 ரன்னில் அவுட்டானார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 51 ரன்னில் வெளியேறினார்.பின்னர் ஹிருடோய் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், வங்காளதேச அணி 48.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதன்மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.இங்கிலாந்து சார்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.


Next Story