உலகக்கோப்பை கிரிக்கெட்: அனைத்து போட்டிகளுக்கும் டிக்கெட் விற்பனை தொடக்கம் ..!


உலகக்கோப்பை கிரிக்கெட்: அனைத்து போட்டிகளுக்கும்  டிக்கெட் விற்பனை தொடக்கம் ..!
x
தினத்தந்தி 8 Sep 2023 4:30 PM GMT (Updated: 8 Sep 2023 4:32 PM GMT)

அனைத்து போட்டிகளுக்கும் மொத்தமாக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது.

புதுடெல்லி,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்(50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை கடந்த மாத இறுதியில் தொடங்கப்பட்டு பல்வேறு கட்டங்களில் நடைபெற்றது.

தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடங்கிய சிறிது நேரத்தில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

இந்த நிலையில் அனைத்து உலகக்கோப்பை போட்டிகளுக்குமான பொது டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியுள்ளது .. இன்று இரவு 8 மணிக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது.

அனைத்து போட்டிகளுக்கும் மொத்தமாக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. https://tickets.cricketworldcup.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை புக் செய்யலாம்.


Next Story