இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தசுன் ஷனகா விலகல்..?


இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தசுன் ஷனகா விலகல்..?
x

Image Courtesy: AFP

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தசுன் ஷனகா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொழும்பு,

நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இதையடுத்து 51 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 6.1 ஓவரில் 51 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தசுன் ஷனகா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வரும் உலகக்கோப்பை தொடரில் தசுன் ஷனகாவுக்கு பதிலாக குசல் மெண்டிஸ் கேப்டன் பொறுப்பை ஏற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story