ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து டேவ் ஹூட்டன் ராஜினாமா..!
டேவ் ஹூட்டன் பயிற்சியின் கீழ் விளையாடிய ஜிம்பாப்வே அணி அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை.
ஹராரே,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேவ் ஹூட்டன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இவரது பயிற்சியின் கீழ் விளையாடிய ஜிம்பாப்வே அணி அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்றில் உகாண்டா மற்றும் நமீபியாவிடம் தோல்வியடைந்த ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
உலகப்போட்டிக்குத் தகுதி பெற முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பது அவசியம். எனவே மூன்றாம் இடம் பிடித்த ஜிம்பாப்வே அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. மேலும் சமீபத்தில் நடைபெற்ற அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரையும் ஜிம்பாப்வே இழந்தது. இந்நிலையில் டேவ் ஹூட்டன் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
Related Tags :
Next Story