கேப்டனாக சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறும் டீன் எல்கர்


கேப்டனாக சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறும்  டீன் எல்கர்
x

Image :AFP 

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.இதில் கடந்த 26ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1 -0 என முன்னிலையில் உள்ளது.

இந்த போட்டியின்போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இல்லாதபோது டீன் எல்கர் அணியை வழிநடத்தினார்.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகினார் . இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் டீன் எல்கர் கேப்டனாக செயல்படுவார் என தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே டீன் எல்கர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்க உள்ளது.



Next Story