டெல்லி டெஸ்ட்: ஆஸி. வீரர் டேவிட் வார்னர் விலகல்


டெல்லி டெஸ்ட்: ஆஸி. வீரர் டேவிட் வார்னர் விலகல்
x

டெல்லியில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் இருந்து டேவிட் வார்னர் விலகியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இதில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, சிராஜ் வீசிய பந்தில் வார்னரின் ஹெல்மெட்டை தாக்கியது. மேலும், அவரது தலை மற்றும்கைகளில் பந்து தாக்கியதில் அவர் காயம் அடைந்தார்.

இந்த நிலையில், டெஸ்ட்டின் 2-வது இன்னிங்சில் இருந்து வார்னர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.


Next Story