தியோதர் கோப்பை: இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல, கிழக்கு மண்டல அணிகள் மோதல்


தியோதர் கோப்பை: இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல, கிழக்கு மண்டல அணிகள் மோதல்
x

நாளை நடக்கும் தியோதர் கோப்பை இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியுடன், கிழக்கு மண்டல அணி மோதுகிறது.

புதுச்சேரி,

தியோதர் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த மத்திய மண்டலத்துக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன்கள் இலக்கை தெற்கு மண்டல அணி 48.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சாய் சுதர்சன் சதம் (132 ரன், 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தார். தொடர்ந்து 5-வது வெற்றியை பெற்ற தெற்கு மண்டலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டல அணி, கிழக்கு மண்டலத்தை சந்திக்கிறது.


Related Tags :
Next Story