தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளையின் தூதராக தோனி ?
தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளை தொடங்கப்பட உள்ளது.
முதல் அமைச்சர் முக ஸ்டாலினை தலைவராக கொண்டு இந்த சாம்பியன்ஷிப் அறக்கட்டளை செயல்பட இருக்கிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளை தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளையின் தூதராக எம்.எஸ்.தோனி?https://t.co/2YzqbyCvPR#MSDhoni #TamilNadu #ThanthiTV
— Thanthi TV (@ThanthiTV) April 12, 2023
Related Tags :
Next Story