"ஓய்வு முடிவை குறிப்பால் உணர்த்திய தோனி..!" - முன்னாள் வீரர் கைப் பரபரப்பு தகவல்


ஓய்வு முடிவை குறிப்பால் உணர்த்திய தோனி..! - முன்னாள் வீரர் கைப் பரபரப்பு தகவல்
x

கோப்புப்படம் 

இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் தோனி, இந்த தொடருடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவார் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அவரிடமே கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால் தனது ஓய்வு முடிவு குறித்து தோனி இதுவரையில் எந்த தகவலும் அளிக்கவில்லை. தோனி இந்த தொடருடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்றும் சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வந்தாலும், சிலரோ அவர் அடுத்த சீசனும் விளையாடுவார் என்றும் கூறி வருகின்றனர்.

அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை கேப்டன் தோனி விளையாடமாட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கூறி உள்ளார்.

தோனி ஓய்வு பெறுவாரா என்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள முகமது கைப், நடப்பு சீசனுடன் ஓய்வு பெறுவதை தோனி பல முறை உணர்த்திவிட்டதாகவும், அடுத்த சீசனில் அவர் ஆடமாட்டார் என்றே தனக்கு தோன்றுவதாகவும் கைஃப் கூறி உள்ளார்.

கவாஸ்கர் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது, தோனியின் சிறப்பை வெளிப்படுத்துவதாகவும் கைப் பேசி உள்ளார்.


Next Story