"வீரர்கள் பணத்துக்காக மட்டுமல்ல பெருமைக்காகவும் விளையாடுகிறார்கள்" - சவுரவ் கங்குலி


வீரர்கள் பணத்துக்காக மட்டுமல்ல பெருமைக்காகவும் விளையாடுகிறார்கள் - சவுரவ் கங்குலி
x

Image Courtesy : AFP 

பணத்துக்காக மட்டுமே வீரர்கள் விளையாடுகிறார்கள் என நினைக்க வேண்டாம் என கங்குலி தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை அடுத்த 5 ஆண்டுக்கு (2023 முதல் 2027-ம் ஆண்டு வரை) டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் வழங்குவதற்கான மின்னணு ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்தது. முன்னணி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தங்களது தொகையை குறிப்பிட்டு போட்டிபோட்டு ஏலம் கேட்டன. எதிர்பார்த்தபடியே இந்த முறை ஐ.பி.எல். 'மதிப்பு' தாறுமாறாக எகிறியது.

பரபரப்பான இந்த ஏலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் உரிமம் மொத்தம் ரூ.48, 390 கோடிக்கு விற்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் தற்போது இந்த ஏலம் குறித்தும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் குறித்தும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பேசியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது :

ஐ.பி.எல். ஒளிபரப்பு மெகா ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த இது அரிய வாய்ப்பாகும். இன்னும் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க கிரிக்கெட் வாரியத்துக்கு உதவும். கிரிக்கெட் வீராங்கனைகளின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

இந்த ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்தஸ்துக்காகவும், பெருமைக்காகவும் விளையாடுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story