துலீப் கோப்பை கிரிக்கெட்: வடக்கு மண்டலம் 207 ரன்னில் 'ஆல்-அவுட்'


துலீப் கோப்பை கிரிக்கெட்: வடக்கு மண்டலம் 207 ரன்னில் ஆல்-அவுட்
x

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வடக்கு மண்டலம் 207 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வடக்கு மண்டலம்-தெற்கு மண்டலம் இடையிலான அரைஇறுதி ஆட்டம் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 630 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வடக்கு மண்டல அணி 2-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்து இருந்தது. 3-வது நாளான நேற்று தொடந்து ஆடிய வடக்கு மண்டல அணி 67 ஓவர்களில் 207 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தெற்கு மண்டலம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் (தமிழ்நாடு) 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 2-வது இன்னிங்சை ஆடிய தெற்கு மண்டல அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து 580 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் உள்ளது. இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

கோவையில் நடந்து வரும் மத்திய மண்டலம்-மேற்கு மண்டலம் இடையிலான அரைஇறுதி ஆட்டத்தில் மேற்கு மண்டல அணி முதல் இன்னிங்சில் 257 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அடுத்து ஆடிய மத்திய மண்டல அணி முதல் இன்னிங்சில் 128 ரன்னில் சுருண்டது. இதைத்தொடர்து 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மேற்கு மண்டல அணி 371 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக பிரித்வி ஷா 142 ரன்கள் எடுத்தார். பின்னர் 501 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை ஆடிய மத்திய மண்டல அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்தது.


Next Story