கோலியை மேரீ மீ என கேட்டவர்...! மற்றொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்


கோலியை மேரீ மீ என கேட்டவர்...! மற்றொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்
x

2014 ஆம் ஆண்டில் விராட் கோலி மேரி மீ !! என கேட்டு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்து இருந்தார். இருப்பினும், விராட் கோலி இந்த டுவீட்டுக்கு பதிலளிக்கவில்லை.

லண்டன்

பெண்கள் கிரிக்கெட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளில் அதிக லெஸ்பியன் தம்பதிகள் உள்ளனர்.

சமீபத்தில், இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேனியல் வாட். இவர் விராட் கோலியின் பரம ரசிகை. 2014 ஆம் ஆண்டில் விராட் கோலி மேரி மீ !! என கேட்டு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்து இருந்தார். இருப்பினும், விராட் கோலி இந்த டுவீட்டுக்கு பதிலளிக்கவில்லை.

சமீபத்தில் டேனியல் வாட் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜுன் தெண்டுல்கர் ஆகியோர் டேட்டிங் செய்கிறார்கள் என்று புகைபடம் வைரலானது. லண்டனில் கிரிக்கெட் பயிற்சியின் நட்பு காரணமாக அவர்கள் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் அது.

இந்த நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ஜார்ஜியா ஹாட்ஜுடன் காதலில் டேனியல் வாட் ... சமூக ஊடகங்களில் நடுத்தர விரல் வளையத்தில் லிப் -லாக் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அதன் தலைப்பாக என்னுடையது என்றென்றும் என பதிவிட்டு உள்ளார்.ஜார்ஜி ஹாட்ஜுடன் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்தார்.




Next Story