உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு
உலகக் கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் ,
இந்தியாவில் வரும் அக்டோபர் , நவம்பர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.
இந்த நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.
Related Tags :
Next Story