உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்
குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆட்டம் நடைபெறுகிறது.
அகமதாபாத்,
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்து அணிகளும் மோதி வருகின்றன. குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
ஐந்து முறை சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் 2 ஆட்டங்களில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றாலும் அதன் பிறகு இலங்கை, பாகிஸ்தான், நெதர்லாந்து, நியூசிலாந்து அணிகளை துவம்சம் செய்து எழுச்சி பெற்றது. தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி அரைஇறுதி வாய்ப்பை அதிகரிக்கும் வேட்கையுடன் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியுள்ளது.
இங்கிலாந்து அணி 6 ஆட்டங்களில் ஆடி ஒரு வெற்றி, 5 தோல்வி என்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதுடன் அரை இறுதி வாய்ப்பையும் பறிகொடுத்து விட்டது. இனிமேல் இழக்க எதுவுமில்லை என்பதால் அந்த அணி நெருக்கடியின்றி ஆடுகிறது.