22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து


22 ஆண்டுகளுக்குப் பிறகு  ஜிம்பாப்வே அணிக்கு எதிராக  டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து
x

Image Courtesy : ICC Twitter 

தினத்தந்தி 15 Aug 2023 10:08 PM IST (Updated: 16 Aug 2023 4:14 PM IST)
t-max-icont-min-icon

2025 ஆம் ஆண்டு இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது

லண்டன்,

22ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது . 2025 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை 4 நாட்கள் இந்த டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கூறியதாவது ,

22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணியுடன் இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சிறப்பான வரலாறு உள்ளது. ஜிம்பாப்வே அணி உலக தரத்திலான வீரர்களை கொடுத்துள்ளது. ஜிம்பாப்வேவுடன் உறவை மேம்படுத்த நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என கூறினார்

மேலும் இது குறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் கிவ்மோர் மகோனி கூறியதாவது ,

இந்த சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. இங்கிலாந்து போன்ற சிறந்த அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் கிடைப்பது எங்கள் தற்போதைய தலைமுறை வீரர்களுக்கு மிகப்பெரியது. என கூறினார்.

கடைசியாக இங்கிலாந்து அணி கடந்த 2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடியிருந்தது.


Next Story