தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் முதல் பந்தில் டக் அவுட்...! மோசமான சாதனையை பதிவு செய்த சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவை ,சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்
சென்னை,
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 49 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 21 ரன்களில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
இந்தப் போட்டியில் 6வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.ஆனால் அவர் முதல் பந்திலேயே ஆஸ்திரேலிய அணியின் ஆஷ்டன் அகர் பந்துவீச்சில் போல்டானார். ஏற்கனவே தொடரில் -முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அவர் ஸ்டார்க் வீசிய முதல் பந்தில் ஆட்டமிழந்திருந்தார்.
இதனால் அவர் கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
ஒருநாள் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் முதல் பந்திலேயே ஆட்டமிழந்த (கோல்டன் டக் அவுட் ) ஆன முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை சூர்யகுமார் பதிவு செய்துள்ளார்
மேலும் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் டக் அவுட் ஆன இந்திய வீர்ரகளின் பட்டியலில் அவர் இணைந்துள்ளளர் .
ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை டக் அவுட் ஆன இந்திய வீரர்கள் :
சச்சின் டெண்டுல்கர், ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அனில் கும்ப்ளே, சூர்யகுமார் யாதவ் .
3 போட்டிகளிலும் கோல்டன் டக் அவுட் ஆன் சூர்யகுமார் யாதவை ,சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்