டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் - ஜேம்ஸ் ஆண்டர்சன் வரலாற்று சாதனை


டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் - ஜேம்ஸ் ஆண்டர்சன் வரலாற்று சாதனை
x

image courtesy: twitter/ @ICC

தினத்தந்தி 9 March 2024 4:53 AM GMT (Updated: 9 March 2024 8:22 AM GMT)

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஜேம்ஸ் ஆண்டர்சன் படைத்துள்ள்ளார்.

தர்மசாலா,

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 477 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 110 ரன்களும், ரோகித் 103 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 700 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதில் ஸ்டூவர்ட் பிராட் 604 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஆண்டர்சன் 3-வது இடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:-

1. முரளிதரன் - 800 விக்கெட்டுகள்

2. ஷேன் வார்னே - 708 விக்கெட்டுகள்

3. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 700 விக்கெட்டுகள்

4. அனில் கும்ப்ளே- 619 விக்கெட்டுகள்

5. ஸ்டூவர்ட் பிராட் - 604 விக்கெட்டுகள்


Next Story