இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி : இந்திய அணி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்
சவுத்தம்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. .இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 3 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.இரு அணிகளும் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்க தேர்வு செய்தார்.இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் இன்று அறிமுக போட்டியில் விளையாட உள்ளார்.
இந்திய அணி :
ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் , அக்சர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து அணி :
ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (கேப்டன் ), டேவிட் மாலன், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், ஹாரி புரூக், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், டைமல் மில்ஸ், ரீஸ் டாப்லி, மாட் பார்கின்சன்.






