வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் : 103 ரன்களுக்கு சுருண்டது வங்காளதேச அணி


வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் : 103 ரன்களுக்கு சுருண்டது வங்காளதேச அணி
x

Image Courtesy : ICC 

தினத்தந்தி 16 Jun 2022 6:32 PM GMT (Updated: 16 Jun 2022 6:33 PM GMT)

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது .

நார்த் சவுண்ட் ,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுபயணம் செய்து 2 டெஸ்ட் ,3 டி20,3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது .

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்கம் முதலே விக்கெட்டுக்களை இழந்தது .அந்த அணியின் மஹ்முதுல் ஹசன் ஜாய், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, மொமினுல் ஹக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர் .அதன்பிறகு தமிம் இக்பால் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் .

பின்னர் வந்த அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுத்தார்.அரைசதம் கடந்த அவர் 51 ரன்களுக்கு வெளியேறினார் ,

அடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் வங்காளதேச அணி 103 ரன்களுக்கு 10 விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது.வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் ,ஜேடன் சில்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.


Next Story