பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல்நலக்குறைவால் காலமானார்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் உடல்நலக்குறைவால் காலமானார்
x

கோப்புப்படம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இஜாஸ் பட் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. அந்த அணிக்காக 8 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார்.

2008-ம் ஆண்டு முதல் 2011 வரை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்தார். அவரது பதவி காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் நிறைய குழப்பங்களும், சர்ச்சைகளும் அரங்கேறின.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது, சல்மான் பட், முகமது அமிர், முகமது ஆசிப் ஆகிய வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது, சில முறை கேப்டன்கள் மாற்றம், சரியாக ஆடாத முன்னணி வீரர்களுக்கு தடை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.


Next Story