எந்த மருந்தாவது கொடுத்து என்னை போட்டிக்கு தயார்படுத்துங்கள் : டாக்டரிடம் கூறிய சூர்யகுமார் யாதவ்... காரணம் என்ன ?


எந்த மருந்தாவது கொடுத்து என்னை போட்டிக்கு தயார்படுத்துங்கள் : டாக்டரிடம் கூறிய சூர்யகுமார் யாதவ்... காரணம் என்ன ?
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 28 Sep 2022 8:11 AM GMT (Updated: 28 Sep 2022 8:15 AM GMT)

போட்டிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகிய இருவரும் ஒரு நேர்காணலில் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வந்தது. இரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது.இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன்மூலம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதுடன் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசி 36 பந்துகளில் 69 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் போட்டிக்கு பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவரும் ஒரு நேர்காணலில் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அப்போது சூர்யகுமாரிடம் பிசியோ அறையில் உங்களைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றும், அதிகாலை 3 மணிக்கு ஏன் எழுந்தீர்கள் என்றும் அக்சர் படேல் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ்,

போட்டிக்கு முன்தினம் இரவு முதல் எனக்கு தீவிரமான வயிற்று வலி இருந்தது. அத்துடன் காய்ச்சலும் அதிகமாக இருந்தது. அதனால் போட்டிக்கு முன்பாக நான் டாக்டரிடம் சென்று எனக்கு என்ன செய்வீர்களோ தெரியாது. இன்று உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள். அப்போது நான் இப்படி உடல்நல குறைவால் இருப்பதை பார்த்து இருக்க மாட்டீர்கள். போட்டிக்கு என்னை தயார்படுத்துங்கள். அதற்காக ஊசி மருத்து மாத்திரை என்று எதை வேண்டுமானாலும் கொடுங்கள் என்றுகேட்டேன். அவர்கள் எனக்கு மருந்தை கொடுத்தனர்.அதன்பின்னர் களத்தில் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்த உடன் . அது வேறு ஒரு உணர்வாக அமைந்தது" எனத் தெரிவித்தார்.


Next Story