ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு


ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு
x

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் முக்கியமான இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணியை பொறுத்தமட்டில், ரன் ரேட்டில் பின்தங்கி இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல, டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வி கண்டால் பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 13 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே சமயம் பெங்களூரு அணி தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும். எனவே இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி பெங்களூரு அணிக்கு இருக்கிறது.

மறுமுனையில், அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னேறிவிட்டது.

இந்த நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற உள்ள 67-வது லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்ட்யா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் - அணி விவரம் : விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், யாஷ் தயால், முகமது ஷமி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - அணி விவரம் : விராட் கோலி, பாப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் , ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், சித்தார்த் கவுல், ஜோஷ் ஹேசில்வுட்


Next Story