பிளே ஆஃப் சுற்று: குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்றது- சி.எஸ்.கே முதலில் பேட்டிங்


பிளே ஆஃப் சுற்று:  குஜராத்  டைட்டன்ஸ் அணி டாஸ் வென்றது- சி.எஸ்.கே முதலில் பேட்டிங்
x
தினத்தந்தி 23 May 2023 7:03 PM IST (Updated: 23 May 2023 7:13 PM IST)
t-max-icont-min-icon

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - குஜராத் டைட்டனஸ் அணியுடன் மோதுகிறது.

சென்னை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. இதில் 10 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த குஜராத் டைட்டன்ஸ் (20 புள்ளி), சென்னை சூப்பர் கிங்ஸ் (17 புள்ளி), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (17 புள்ளி), மும்பை இந்தியன்ஸ் (16 புள்ளி) ஆகிய அணிகள் 'பிளே-ஆப்' சுற்றை எட்டின.

இந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிசுற்றில் மோதுகின்றன. சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

தகுதி சுற்று ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பாக வெளியேற்றுதல் சுற்றில் ஜெயிக்கும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் விளையாட வேண்டும்.

போட்டிக்கான இரு அணிகளின்பட்டியல் வருமாறு:-

சென்னை: கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), தீபக் சாஹர், தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, பதிரானா.

குஜராத்: சுப்மன் கில், விருத்திமான் சஹா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ஷனகா, ராகுல் திவேதியா, ரஷித்கான், யாஷ் தயாள், முகமது ஷமி, நூர் அகமது, மொகித் ஷர்மா.


Next Story