இலங்கை சுற்றுப்பயணம் : இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்


இலங்கை சுற்றுப்பயணம் : இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமனம்
x

Image Courtesy : Twitter / BCCI Women 

தினத்தந்தி 8 Jun 2022 1:43 PM GMT (Updated: 8 Jun 2022 1:56 PM GMT)

ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் ஓய்வு பெற்றதை அடுத்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. அதை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடர் ஜூன் 23 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை தொடருக்கு எதிரான இந்திய அணி வீராங்கனைகள் பெயர் பின்வருமாறு :

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன் ), ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா (விசி), எஸ் மேக்னா, தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கயக்வாட், சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ் (வாரம்), பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் , ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ்.


Next Story