மிதாலி ராஜ் சாதனை முறியடிப்பு - 20 ஓவர் போட்டிகளில் ஹர்மன்பிரீத் கவுர் புதிய சாதனை..!!


மிதாலி ராஜ் சாதனை முறியடிப்பு - 20 ஓவர் போட்டிகளில் ஹர்மன்பிரீத் கவுர் புதிய சாதனை..!!
x

Image Courtesy : AFP 

மிதாலி ராஜ் சாதனையை தற்போது முறியடித்து ஹர்மன்பிரீத் புதிய சாதனை படைத்துள்ளார்.

தம்புல்லா,

இந்தியா - இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 31 ரன்களுடன் களத்தில் இருந்ததுடன் ஆட்டநாயகி விருதையும் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். பெண்கள் 20 ஓவர் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இவர் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதுவரை 123 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஹர்மன்பிரீத் 2,372 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் ஓய்வு பெற்ற மிதாலி ராஜ் 89 போட்டிகளில் 2,364 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த சாதனையை ஹர்மன்பிரீத் தற்போது முறியடித்து சாதனை படைத்துள்ளார்.


Next Story