பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்


பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்
x

பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

துபாய்,

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்டர்ஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிசா ஹீலி முதலிடத்தில் நீடிக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 143 ரன்கள் குவித்த இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 4 இடம் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார். மற்ற இந்தியர்களான மந்தனா ஒரு இடம் அதிகரித்து 6-வது இடத்தையும், தீப்தி ஷர்மா 8 இடங்கள் உயர்ந்து 24-வது இடத்தையும், பூஜா வஸ்ட்ராகர் 4 இடம் முன்னேறி 49-வது இடத்தையும், ஹர்லீன் தியோல் 46 இடங்கள் அதிகரித்து 81-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டென் முதலிடத்தில் தொடருகிறார். இங்கிலாந்து தொடருடன் ஓய்வு பெற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 5-வது இடத்தில் உள்ளார். இதே தொடரில் அசத்திய மற்றொரு இந்திய பவுலர் ரேணுகா சிங் 35 இடங்கள் எகிறி 35-வது இடத்தை எட்டிப்பிடித்துள்ளார்.

1 More update

Next Story