இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது கொஞ்சம் அதிகம் - முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர்


இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது கொஞ்சம் அதிகம் - முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர்
x

இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது கொஞ்சம் அதிகம் என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் கூறியுள்ளார்.


8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நவம்பர் 13-ந்தேதி வரை 7 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் விளையாடும்.

அவற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர்12 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் நேரடியாக சூப்பர்12 சுற்றில் விளையாட உள்ளன. மொத்தம் 45 ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்த டி20உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளது கொஞ்சம் அதிகமாக உள்ளது ர்ன் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பவுன்ஸ் இருக்கும். அங்குள்ள மைதானம் மிகவும் பெரிதாக இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுக்கும். அதனால் அவர்கள் அணிக்கு தேவை. ஆனால், மூன்று சுழற்பந்து வீச்சாளர் என்பது கொஞ்சம் ஓவர். ஆடும் லெவனில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து தான் விளையாட முடியும். இரண்டு சுழற்பந்து வீச்சாளர் என்பது ஒரு சாய்ஸாக இருக்கும். ஆனால் 3 பேர் என்பது அதிகம்.

அதில் யாரேனும் ஒருவருடைய இடத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளரான உம்ரான் மாலிக் இருந்திருக்க வேண்டும். அது அணிக்கு வலு சேர்க்கும் வகையில் இருந்திருக்கும். அவரை போன்ற வீரரை தேர்வு செய்திருந்தால் அது சிறப்பான நகர்வாக அமைந்திருக்கும்" என அவர் தெரிவித்துள்ளார்.


Next Story