அவர் 24 கேரட் தங்கம்...ரோகித்துக்கு பிறகு இந்தியாவின் சரியான டெஸ்ட் கேப்டன் அவர்தான் - ஆகாஷ் சோப்ரா


அவர் 24 கேரட் தங்கம்...ரோகித்துக்கு பிறகு இந்தியாவின் சரியான டெஸ்ட் கேப்டன் அவர்தான் - ஆகாஷ் சோப்ரா
x

Image Courtesy: AFP

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இந்திய அணி இந்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி30 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

50 ஒவர் உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா கடந்த இரு வருடங்களில் எந்த ஐசிசி உலகக்கோப்பையையும் வெல்லவில்லை.

அதனால் அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவை வழி நடத்தப் போகும் கேப்டனை உருவாக்குவதற்கான வேலைகளை பிசிசிஐ துவங்கியுள்ளது. அதன்படி இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இதையடுத்து இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட ரிஷப் பண்ட் பொருத்தமானவர் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு மிகவும் நீண்ட கால பார்வையில் சுப்மன் கில் சரியானவராக இருப்பார். ஆனால் தற்போதைக்கு அவர் டெஸ்ட் கேப்டனாக பொருந்த மாட்டார்.

எனவே சமீப காலத்தைப் பற்றி பேசும்போது அந்த பதவிக்கு ரிஷப் பண்ட் சரியானவராக இருக்கலாம். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 24 கேரட் தங்கம். எனவே அவரும் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவிக்கு போட்டியிடும் வீரர்களில் ஒருவராக இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story