ஒருநாள் போட்டியில் அதிக சதம்: மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா


ஒருநாள் போட்டியில் அதிக சதம்: மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்த ஸ்மிருதி மந்தனா
x

ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அதிக சதம் விளாசிய மிதாலி ராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்துள்ளார்

பெங்களூரு,

இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார்.

இதன்மூலம் இந்திய பெண்கள் அணிக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய மிதாலி ராஜ் சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்துள்ளார்.மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார். 27 வயதான ஸ்மிரிதி மந்தனா 84 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 7 சதங்கள் அடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story