ஆஸ்திரேலிய அணிக்கு 307 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்


ஆஸ்திரேலிய அணிக்கு 307 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்
x
தினத்தந்தி 11 Nov 2023 2:34 PM IST (Updated: 11 Nov 2023 3:19 PM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரு ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - வங்காளதேசம் அணிகள் மோதின.

புனே,

இந்தியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்று ஆஸ்திரேலியா வங்காளதேசம் இடையேயான ஆட்டம் தொடங்கியது. மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து வங்காளதேச அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தன்சித் ஹாசன் மற்றும் லிட்டன் தாஸ் நிதானமாக ஆடி ஓரளவு ரன் சேர்த்தனர். முதல் விக்கெட்டிற்கு 76 ரன்கள் சேர்த்தனர்.

அதனை தொடர்ந்து டவுஹிட் ஹிர்டாய் அடித்த அரைசதம் மற்றும் அடுத்தடுத்து வந்த வீரர்களால் வங்காளதேச அணி 300 ரன்களை கடந்தது. இறுதியாக 50 ஓவர் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய தவுஹித் ஹிர்டாய் அதிகபட்சமாக 74 ரன்களும், கேப்டன் நஜ்முல் ஹூச்சைன் 45 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை ஆடம் சம்பா, சீன் அப்போர் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். தொடர்ந்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.


Next Story