கிளாசன், அப்துல் சமத் அதிரடி..! ஐதராபாத் 182 ரன்கள் குவிப்பு


கிளாசன், அப்துல் சமத் அதிரடி..! ஐதராபாத் 182 ரன்கள் குவிப்பு
x

20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

ஐதராபாத்,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் இந்த போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. ஐதராபாத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 58-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் மார்க்ரம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது

தொடக்க வீரர்களாக அல்மோன்பிரீத் சிங் , அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் அபிஷேக் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களுக்கும் , சிறப்பாக விளையாடிய அல்மோன்பிரீத் சிங் 36 ரன்களுக்கும் வெளியேறினர்.

பின்னர்'வந்த மார்க்ரம் 28 ரன்கள் , கிளென் பிலிப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். தொடர்ந்து ஹென்ரிச் கிளாசன் , அப்துல் சமத் இணைந்து அதிரடி காட்டினர்.

இருவரும் பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக விளையாடிய கிளாஸன் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் சமத் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார்

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

1 More update

Next Story