ஜூனியர் பெண்கள் கிரிக்கெட் அணியில் 3-4 வீராங்கனைகள் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது - மிதாலிராஜ் கணிப்பு


ஜூனியர் பெண்கள் கிரிக்கெட் அணியில் 3-4 வீராங்கனைகள் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது - மிதாலிராஜ் கணிப்பு
x

கோப்புப்படம் AFP

ஜூனியர் பெண்கள் கிரிக்கெட் அணியில் 3-4 வீராங்கனைகள் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு வாய்ப்புள்ளது என்று மிதாலிராஜ் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இடம் பெற்றிருந்த வீராங்கனைகளில் ஷபாலி வர்மா, விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் சீனியர் அணியிலும் விளையாடி வருகிறார்கள். இவர்களை தவிர்த்து தொடக்க ஆட்டக்காரர் டெல்லியைச் சேர்ந்த சுவேதா செராவத் (7 ஆட்டத்தில் 3 அரைசதம் உள்பட 297 ரன்), பேட்டர் திரிஷா (116 ரன்), வேகப்பந்து வீச்சாளர் திதாஸ் சாது (6 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர்கள் பார்ஷவி சோப்ரா (11 விக்கெட்), அர்ச்சனாதேவி (8 விக்கெட்), மன்னத் காஷ்யப் (9 விக்கெட்) ஆகியோரின் செயல்பாடு வெகுவாக கவர்ந்தது.

இவர்களுக்கு பாராட்டு தெரிவித்த இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், 'இந்த அணியில் இருந்து குறைந்தது 3-4 வீராங்கனைகள் அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு (சீனியர் அணி) நல்ல வாய்ப்புள்ளதாக கருதுகிறேன். இவர்கள் 2025-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் முக்கிய பங்களிப்பை வழங்க வாய்ப்புள்ளது' என்று குறிப்பிட்டார்.


Next Story