'என் தந்தை என்னிடம் சொன்ன அறிவுரையை என் மகன் அர்ஜுனிடம் சொல்கிறேன்' - சச்சின் டெண்டுல்கர்


என் தந்தை என்னிடம் சொன்ன அறிவுரையை என் மகன் அர்ஜுனிடம் சொல்கிறேன் - சச்சின் டெண்டுல்கர்
x

நம்மை நாம் பாராட்டினால்தான் மக்களும் நம்மை பாராட்டுவார்கள் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரராக அறிமுகமானார். அவர் விளையாடிய 4 ஆட்டங்களில் 9.5 ஓவட்கள் வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இருப்பினும் சராசரியாக ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு அதிகமாக விட்டுக்கொடுத்தார்.

இந்த நிலையில் தனது மகனுக்கு தான் சொல்ல விரும்பும் அறிவுரை குறித்து சச்சின் டெண்டுல்கர் மனம் திறந்துள்ளார். இது குறித்து மும்பையில் நடைபெற்ற 'சின்ட்டிலேட்டிங் சச்சின்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது;-

"இளம் வயதில் எனது குடும்பத்தினரிடமிருந்து எனக்கு ஆதரவு கிடைத்தது. அஜித் டெண்டுல்கர்(சகோதரர்) என் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் முக்கிய பங்கு வகித்தார். நிதின் டெண்டுல்கர்(சகோதரர்) எனது பிறந்தநாளில் எனக்காக ஓவியம் வரைந்து கொடுப்பார்.

எனது தாயார் எல்.ஐ.சி.யில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அப்பா பேராசிரியராக இருந்தார். அவர்கள் எனக்கு சுதந்திரத்தை வழங்கினர். அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கும் சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என்று என்று கேட்டுக்கொள்கிறேன்.

எனக்கு கிடைத்த அந்த சுதந்திரமான சூழலை என் மகனுக்காகவும் உருவாக்க முயற்சிக்கிறேன். நம்மை நாம் பாராட்டினால்தான் மக்களும் நம்மை பாராட்டுவார்கள். விளையாட்டில்தான் கவனம் இருக்க வேண்டும் என்று என் அப்பா என்னிடம் சொன்ன அறிவுரையை இப்போது நான் அர்ஜுனிடம் சொல்கிறேன்" என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார்.


Next Story