இந்தூர் மைதானம் மோசமானது - ஐசிசி மதிப்பீடு


இந்தூர் மைதானம் மோசமானது - ஐசிசி மதிப்பீடு
x

இந்தூர் மைதானம் மோசமானது என்று ஐசிசி மதிப்பீடு செய்துள்ளது.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இடையேயான 3-வது டெஸ்ட் இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

முதல் பேட்டிங் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் சேர்ந்தது. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இறுதியில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. கடந்த 1-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் மொத்தம் 3 நாட்களில் முடிவடைந்தது. இந்த போட்டியில் சுழற்பந்துக்கு சாதகமாகவே இந்த மைதானம் இருந்தது. பெரும்பாலான விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.

இந்நிலையில், இந்தூர் கிரிக்கெட் மைதானம் மிகவும் மோசமான மைதானம் என்று ஐஐசி மதிப்பீடு செய்துள்ளது. போட்டிக்கு பின் ஐஐசி நடுவர் கிரிஸ் போர்டு, இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளின் கேட்பன்களுடன் ஆலோசனை நடத்திய பின் மைதானத்தின் தரம் குறித்த அறிக்கையை ஐசிசியிடம் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் அடிப்படையில், இந்தூர் மைதானம் மிகவும் மோசமான மைதானம் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.


Next Story