ஐசிசி டி20 தரவரிசை: புதிய உச்சம் தொட்ட சூர்யகுமார் யாதவ்
டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
டி20 பேட்ஸ்மேனுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.ஐசிசி டி20 தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதல் இந்தியர் என்கிற பெருமையுடன் முதல் இடத்தைத் சூர்யகுமார் யாதவ் தக்கவைத்துக் கொண்டார்.
இதற்கு முன்பு டேவிட் மலான், ஆரோன் பிஞ்ச் ஆகிய இருவரும் மட்டுமே 900 புள்ளிகளை அடைந்துள்ளார்கள். இந்திய வீரர்களில் கோலி அதிகபட்சமாக 897 மற்றும் ராகுல் 854 புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்.
தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார். இதனால் 908 புள்ளிகள் பெற்றுள்ளார்.இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிகப் புள்ளிகளைப் பெற்ற 2-வது வீரர் என்கிற பெருமையை பெற்றுள்ளார்
டி20 கிரிக்கெட்டில் அதிகப் புள்ளிகளைப் இங்கிலாந்தின் மலான் 915 புள்ளிகளை பெற்றிருந்தார் . விரைவில் இந்த சாதனையை சூர்யகுமார் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.