ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடத்தில் அஸ்வின்..! விராட் கோலி முன்னேற்றம்
இந்திய அணியின் ரிஷப் பண்ட் 9வது இடத்திலும் , கேப்டன் ரோஹித் சர்மா 10வது இடத்திலும் உள்ளனர்.
ஐசிசி, இன்று டெஸ்ட் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர் கள் ,பேட்ஸ்மேன்களின் தரவரிசை வெளியிட்டுள்ளது.அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது . இருப்பினும் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது
நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 186 ரன்கள் குவித்த விராட் கோலி விராட் கோலி 8இடங்கள் முன்னேறி 13வது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியாவின் லபிசேன் தொடர்ந்து முதல் இடத்திலும் , ஸ்டீவ் ஸ்மித் 2வது இடத்திலும் உள்ளனர்.மேலும் இந்திய அணியின் ரிஷப் பண்ட் 9வது இடத்திலும் , கேப்டன் ரோஹித் சர்மா 10வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் அஸ்வின் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2வது இடத்தில் உள்ளார்.