2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பெண்கள் அணி அறிவிப்பு - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்...!


2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பெண்கள் அணி அறிவிப்பு - 3 இந்திய வீராங்கனைகளுக்கு இடம்...!
x

Image Courtesy: @ICC

2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட்டின் சிறந்த பெண்கள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவிக்கும்.

அந்த வகையில் ஐசிசி 2022ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணி மற்றும் பெண்கள் டி20 அணி மற்றும் 2022ம் ஆண்டுக்கான ஒருநாள் ஆடவர் அணி, டெஸ்ட் அணியை ஐசிசி அறிவித்திருந்தது. இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் பெண்கள் அணியையும் ஐசிசி அறிவித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக இந்தியா, தென் ஆப்பிரிக்காவில் இருந்து தலா 3 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அணியின் தொடக்க வரிசைக்கு ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலியும், இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவும் தேர்வாகி உள்ளனர். மிடில் ஆர்டரில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வரார்ட், இங்கிலாந்தின் நாட் ஸ்கிவர், ஆஸ்திரேலியாவின் பெத் மூனி தேர்வாகி உள்ளனர்.

தொடர்ந்து ஆல் ரவுண்டர்கள் இடத்துக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், நியூசிலாந்தின் அமெலியா கெர் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். பந்துவீச்சாளர்கள் இடத்துக்கு இங்கிலாந்தின் ஷோபி எக்லெஸ்டோனும், இந்தியாவின் ரேனுகா சிங்கும், தென் ஆப்பிரிக்காவின் அயாபோங்கா காக்கா, ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இந்த அணிக்கு இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாகவும், அலிசா ஹீலி விக்கெட் கீப்பராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான ஐசிசியுன் சிறந்த பெண்கள் ஒருநாள் அணி விவரம்:-

1. அலிசா ஹீலி (விக்கெட் கீப்பர்) (ஆஸ்திரேலியா)

2. ஸ்மிருதி மந்தனா (இந்தியா)

3. லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா)

4. நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து)

5. பெத் மூனி (ஆஸ்திரேலியா)

6. ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்) (இந்தியா)

7. அமெலியா கெர் (நியூசிலாந்து)

8. சோபி எக்லெஸ்டோன் (இங்கிலாந்து)

9. அயபோங்கா காக்கா (தென் ஆப்பிரிக்கா)

10. ரேனுகா சிங் (இந்தியா)

11. ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா)


Next Story