இம்பேக்ட் விதி பேட்டிங்கை மேம்படுத்த உதவியது - சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்


இம்பேக்ட் விதி பேட்டிங்கை மேம்படுத்த உதவியது - சி.எஸ்.கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்
x

Image Courtesy: @ChennaiIPL

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

சென்னை,

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 22-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சை இன்று எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. குஜராத் அணி நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை 6 ரன்னில் வீழ்த்தியது.

இதனால் 2-வது வெற்றியை பெறப் போவது சென்னையா? குஜராத்தா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.சி.எஸ்.கே. மோதும் ஆட் டத்தை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலையில், குஜராத்துடன் இன்று மோதும் ஆட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றது. ஒவ்வொருவரும் எப்போதும் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க இயலாது. ஒரு வீரர் 75 ரன்னை எடுக்கும் போது அணிக்கு உதவியாக இருக்கும்.

ருதுராஜ் கெய்க்வாட்- ரச்சின் ரவீந்திராவின் தொடக்கம் நீடிக்கும். தாக்கத்தை (இம்பேக்ட்) ஏற்படுத்தும் விதி அணியின் பேட்டிங்கை மேம்படுத்த உதவியது. அதை நாம் செயல்படுத்தும் விதம் மிகவும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story