ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர் காயம் குறித்து பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!


ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயஸ் அய்யர் காயம் குறித்து பிசிசிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 15 April 2023 4:46 PM IST (Updated: 15 April 2023 8:22 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான பும்ரா, ஸ்ரேயஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி உள்ளார். காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி, ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்.

மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயஸ் அய்யரும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்நிலையில், இருவரது காயம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

பும்ராவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை நியூசிலாந்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. தற்போது அவர் வலியின்றி இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செய்த பின் பயிற்சியை தொடங்க அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி வெள்ளிக்கிழமை முதல் அவர் தனது பயிற்சியை தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடங்கினார்.

மேலும் ஷ்ரேயஸ் அய்யருக்கு அடுத்த வாரம் கீழ் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். அதன் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்புவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story