மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த இம்ரான் தாஹிர்


மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த இம்ரான் தாஹிர்
x

image courtesy; AFP

இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டுவெய்ன் பிராவோ முதலிடத்தில் உள்ளார்.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர். இவருக்கு 32-வது வயதில்தான் தென் ஆப்பிரிக்க தேசிய அணியில் விளையாட இடம் கிடைத்தது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்காக அவர் 20 டெஸ்ட் போட்டிகள், 107 ஒருநாள் போட்டிகள் மற்றும் 38 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் ஐ.பி.எல். தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2018 மற்றும் 2021 -ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் தற்போது 44 வயதாகியுள்ள இம்ரான் தாஹிர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்த வகையில் தற்போது வங்காளதேச பிரீமியர் லீக் தொடரில் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் குல்னா டைகர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 4 ஓவர்கள் பந்துவீசி 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தார்.

அவர் எடுத்த இந்த 5 விக்கெட்டுகள் மூலம் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் சாதனை பட்டியலில் 4-வது வீரராக இணைந்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டுவெய்ன் பிராவோ உள்ளார்.

அந்த பட்டியல்;

1. டுவெய்ன் பிராவோ - 624 விக்கெட்டுகள்

2. ரஷித் கான் - 556 விக்கெட்டுகள்

3. சுனில் நரின் - 532 விக்கெட்டுகள்

4. இம்ரான் தாஹிர் - 500 விக்கெட்டுகள்


Next Story