இந்தியா- அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 : மழையால் ஆட்டம் தாமதம்

Image Courtesy : BCCI
மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டப்ளின்,
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி 20 போட்டியில் ஆடுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.
இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் அறிமுக வீரராக இன்று உம்ரான் மாலிக் களம் இறங்குகிறார். இந்நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






