மோசமான வானிலை: இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் பாதியில் நிறுத்தம்
கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்தியா - நியூசிலாந்து ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சிம்லா,
உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடியது. இந்தியா 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது மோசமான வானிலை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் ஆட்டம் நடைபெற்ற நிலையில் திடீரென மைதானத்தை சுற்றிலும் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக போதிய வெளிச்சமின்மை சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பனிமூட்டம் குறைந்து போதிய வெளிச்சம் கிடைத்த உடன் ஆட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.