தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20- இந்தியா பந்துவீச்சு தேர்வு; கோலி, ராகுலுக்கு ஓய்வு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20- இந்தியா பந்துவீச்சு தேர்வு; கோலி, ராகுலுக்கு ஓய்வு
x
தினத்தந்தி 4 Oct 2022 1:04 PM GMT (Updated: 4 Oct 2022 1:16 PM GMT)

இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி, ராகுல், அர்ஷ்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தூர்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் தோல்வி அடைந்து தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே தொடரை இழந்து விட்டது.

இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடக்கிறது. ஆறுதல் வெற்றியை பெற தென் ஆப்பிரிக்க அணியும், தொடரை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்குகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி அணி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் கோலி, ராகுல், அர்ஷ்தீப் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர், உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் விளையாடுகின்றனர்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி சர்வதேச 20 ஓவர் போட்டி இது தான். எனவே வெற்றியுடன் தொடரை நிறைவு செய்வதில் இந்திய வீரர்கள் தீவிரம் காட்டுவார்கள்.


Next Story