இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி பந்துவீச்சு தேர்வு


இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
x

Image Tweeted By @BCCI 

தினத்தந்தி 14 July 2022 11:38 AM GMT (Updated: 14 July 2022 11:43 AM GMT)

காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுகிறார்.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டன் ஓவலில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுகிறார்.

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, சாஹல்

இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, டேவிட் வில்லி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, ரீஸ் டோப்லி


Next Story