தனது நீண்டநாள் காதலியை கரம் பிடித்தார் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி
நவ்தீப் சைனி - ஸ்வாதி தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, 2019 ஆம் ஆண்டில் தனது 30 வயதில் இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமானார். இவர், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகிறார். தொடர் காயங்கள் காரணமாக இவர் இந்திய அணியில் சமீப காலமாக விளையாடவில்லை.
இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலியான ஸ்வாதி அஸ்தானாவை நேற்று நவ்தீப் சைனி திருமணம் செய்து கொண்டார் . திருமணப் புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நவ்தீப் சைனி - ஸ்வாதி தம்பதிக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story