இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் சந்திப்பு
இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி வீரர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை,
சென்னையில் நடைபெற உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் இந்திய மற்றும் இலங்கை வீரர்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
போரூர் ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கின்றன.
இந்த நிலையில் இந்த போட்டியில் இதில் பங்கேற்க உள்ள இரு அணி வீரர்களும், ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story