2022ஆம் ஆண்டின் 20 ஓவர் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு சூர்ய குமார் தேர்வு


2022ஆம் ஆண்டின் 20 ஓவர் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதுக்கு சூர்ய குமார் தேர்வு
x

2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை தட்டி சென்றார் சூர்யகுமார் யாதவ் 31 போட்டிகளில் 1164 ரன்கள் அடித்து 46.56 சராசரி

மும்பை

கடந்த ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் சூர்யா குமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் இந்த முறை பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்தின் சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா ஆகியோரும் பந்தயத்தில் இருந்தனர். ஆனால் சூர்யா இவர்களையெல்லாம் முறியடித்து

சூரியாகுமார் யாதவ் கடந்த 2021-ம் ஆண்டு 31 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ள்ர். இந்த 31 போட்டிகளில் சூர்யா அதிகபட்சமாக 1164 ரன்கள் எடுத்து உள்ளார். ஒரு ஆண்டில் 20 ஓவர் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் ஆனார்.

அதே நேரத்தில், முகமது ரிஸ்வான் ஒரு வருடத்தில் 1000 ரன்களை கடந்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

கடந்த ஆண்டு சிக்கந்தர் ராசாவும் நல்ல பார்மில் இருந்தார். ராசா 24 20 ஓவர் போட்டிகளில் 753 ரன்கள் குவித்ததோடு 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அதனால் அவர் வலுவான ஆல்ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டியில் இங்கிலாந்தின் சாம் கரணும் இருந்தார். சாம் கடந்த ஆண்டு 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் நல்ல பேட்டிங் செய்தார். ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆட்டநாயகன் விருதையும் கரண் வென்று உள்ளார்,.


Next Story