ஐபிஎல் 2023: பும்ராவை தொடர்ந்து மும்பை அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் விலகல்..?


ஐபிஎல் 2023: பும்ராவை தொடர்ந்து மும்பை அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் விலகல்..?
x

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது.

மெல்போர்ன்,

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த வருடன் ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது.

அதனால் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதரபாத் உள்ளிட்ட மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் தோனிக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்பதால் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்ல கடுமையாக முயற்சிக்கும்.

ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியாக கருதப்படும் மும்பை அணி கடந்த ஐபிஎல் தொடரில் 14 ஆட்டங்களில் ஆடி 4 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் கடைசி இடம் பிடித்தது. அதனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரிலாவது மீண்டும் சாம்பியன் அணி என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் மும்பை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மும்பை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவை ஜை ரிச்சர்ட்சன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியாகியது. அப்போதே அவர் ஐபிஎல் தொடரில் ஆடுவாரா? இல்லையா? என்பதில் சந்தேகம் நிலவியது.

இந்நிலையில் தொடையில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் அதிலிருந்து குணமாக சில காலம் ஆகும் என்பதால் இந்த வருட ஐபிஎல் சீசனில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மும்பை அணியின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகி உள்ளார். தற்போது ரிச்சர்ட்சனும் விலகி உள்ளதால் மும்பை அணி தற்போது சிக்கலில் உள்ளது.


Next Story