ஐபிஎல் 2023: பெங்களுரு அணியில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்..!
மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் ரீஸ் டாப்லி காயம் அடைந்தார்.இதில் தோள்பட்டை பகுதியில் டாப்லிக்கு காயம் ஏற்பட்டது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் இருந்து பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லி விலகியுள்ளார். மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு வீரர் ரீஸ் டாப்லி காயம் அடைந்தார்.இதில் தோள்பட்டை பகுதியில் டாப்லிக்கு காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து போட்டியில் இருந்து பாதியிலேயே டாப்லி வெளியேறினார் . காயத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தால் டாப்லி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார்.ஏற்கனவே பெங்களூரு அணியின் வில் ஜாக்ஸ் , ரஜத் படிதார் ஆகியோர் தொடரில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story