ஐபிஎல் 2023 : ஜியோ சினிமாவின் விளம்பர தூதராக சூர்ய குமார் யாதவ் ஒப்பந்தம்


ஐபிஎல் 2023 : ஜியோ சினிமாவின் விளம்பர தூதராக சூர்ய குமார் யாதவ் ஒப்பந்தம்
x

சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் மும்பை அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் வரும் 31ம் தேதி தொடங்க உள்ளது. 31ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த வருடன் ஐபிஎல் தொடர் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற உள்ளது.

இந்த சீசனுக்கான போட்டிகள் ஜியோ சினிமா தளத்தில் நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும் என்றும், இதனை கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பார்க்கலாம் என்றும் ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ஜியோ சினிமாவின் விளம்பர தூதராக டி20 போட்டிகளில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் மும்பை அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story